அஜீத் ரசிகர்களுக்கு இன்னமொரு சந்தோஷ செய்தி. மீண்டும் ஒரு இரட்டை வேட ரீமேக் கதையில் நடிக்கிறார் அஜீத். |
தற்போது ஏகன் திரைப்படத்தில் நடித்துவரும் அஜீத், சிவாஜி பிலிம்ஸ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்தின் சொந்தப் படம் (பில்லா -2) ஆகியவற்றை முடித்துவிட்டு அசோக் அமிர்தராஜின் படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக இந்தியில் சைப் அலிகான்- அக்ஷய் கன்னா நடித்த சூப்பர் ஹிட் படமான ரேஸ் படத்தை ரீமேக் செய்கிறார்கள். முதலில் இந்தப் படத்தை இரு கதாநாயகர்கள் கொண்ட படமாக எடுக்கவே விரும்பினாராம் அசோக் அமிர்தராஜ். ஆனால் படத்தைப் பார்த்த அஜீத், தானே இரு வேடங்களிலும் நடிப்பதாகத் தெரிவித்துவிட்டதால், மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம் அசோக். இந்தப் படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது அஜீத் நடிக்கும் ஏகன் படம், ஷாரூக்கானின் மே ஹூன் நாவின் தழுவல் என்பது தெரியும்தானே... ரீமேக் செண்டிமென்ட்டுக்கு 'தல'யும் தப்பல?! |
--
People Of Thambiluvil
No comments:
Post a Comment