quality="high"
type="application/x-shockwave-flash"
WMODE="transparent"
width="826"
height="125"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
allowScriptAccess="always" />

Sunday, August 31, 2008

வடிவேலு செய்த வம்பு

வடிவேலு செய்த குளறுபடியால் வில்லு படத்தின் படிப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. தடைபட்டது சுவிட்சர்லாந்தில் என்பது வருத்தமான விஷயம்.

சுவிட்சர்லாந்தில் பாடல் மற்றும் வசனக் காட்சிகளை எடுக்க வில்லு யூனிட் விமானம் ஏறியது. விஜய், நயன்தாராவுடன் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமனும் இந்த டீமில் உண்டு. வடிவேலுவும் அவர்களுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால், புயல் ஏனோ இந்தப் பயணத்தை புறக்கணித்தது.

ஐங்கரன் நிறுவனம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இறங்கி வரவில்லையாம் கறுப்பு காமெடியர். வடிவேலு இல்லாமல் பிரகாஷ் ராஜையும், ஸ்ரீமனையும் எவ்வளவு நாள் சும்மாவே வைத்திருப்பது?

படப்பிடிப்பில் கலந்து கொள்ளமலே இருவரும் சென்னை திரும்ப, பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது. வடிவேலுவை ஒப்பந்தம் செய்யலாமா என ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் மறுபரிசீலனையில் இறங்கி உள்ளது.

புயல் புரிந்து கொண்டால் சரி!

--
People Of Thambiluvil
www.thirukkovil.com

Friday, August 29, 2008

திருட்டு வி.சி.டி. பிரச்சனை: 'தாம்தூம்' புதிய திட்டம்


திருட்டி வி.சி.டி. பிரச்சனையால் தமது பட வசூலுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற முனைப்பில், 'தாம்தூம்' படக்குழு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

குண்டர் சட்டம் கொண்டு வந்தும் சினிமாக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது திருட்டு வி.சி.டி. பிரச்சனை.

இதனால் பாதிக்கப்படாமல் இருக்க, போலீஸை மட்டும் நம்பினால் போதாது என்று தாம்தூம் படக்குழு களத்தில் இறங்கியுள்ளது.

இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் மீடியா ஒன் சூரியராஜ் குமார் ஆகியோர் இந்தப் போராட்டத்தில், தமிழ்த் திரைப்பட பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கே.ராஜனை துணைக்கு அழைத்துள்ளனர். இவர்கள் மூவரும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது திட்டத்தை விளக்கினர்.

அதன்படி, 'தாம்தூம்' திருட்டு வி.சி.டி. விற்கப்படுகிறதா என்பதை இவர்கள் அமைக்கும் டீம், 24 மணி நேரமும் கண்காணிக்கும். அப்படி விற்கப்படுவது குறித்து யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம். இதற்காக பத்து பிரத்யேக லைன்கள் அமைக்கப்படும்.

கேபிளில் 'தாம்தூம்' படத்தை பார்ப்பது, வீடுகளில் திருட்டு வி.சி.டி.யில் பார்ப்பது ஆகியவற்றை ஜெயம் ரவியின் ரசிகர் மன்றத்தினர் கண்காணிப்பர்.

தாம்தூம் சிறப்பாக வந்திருக்கிறது. அதன் பலன் குறுக்கு வழியில் சிதறக் கூடாது என்பதற்கே இந்த முன்னேற்பாடுகளாம்!

--
People Of Thambiluvil

சத்யம் திரைவிமர்சனம்

Satyam
PR
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!

முதலமைச்சர் கனவில் இருக்கும் மூன்று அமைச்சர்களைக் கொல்வதற்கு ரவுடியை நியமிக்கிறார், ஓர் அமைச்சர் (கோட்டா சீனிவாசராவ்). அம்மூவரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள்.

ஆனால்,ரவுடியை நியமித்த அமைச்சரே அதிர்ச்சியில் உறைகிறார் காரணம், அமைச்சர்களைக் கொன்றது அவர் நியமித்த ரவுடியல்ல; வேறு யாரோ. 'அந்த மர்ம கொலைக்காரனின் அடுத்த இலக்கு நாம் தானோ' என்பது கோட்டா சீனிவாசராவின் பீதி.

இது ஒருபுறமிருக்க, கொலையாளியைத் தேடும் வேட்டையில் தீவிரமாக களமிறங்குகிறது காவல்துறை. கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு,௦ அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

புலன் விசாரணை மேற்கொண்ட விஷாலுக்கோ அதிர்ச்சியோ அதிர்ச்சி. தாம் காக்கிச்சட்டை அணிய காரணமாக இருந்தவரும், 'சட்டம் தண்டிக்கணும், சாமிதான் கண்ணை குத்தணும்' என்று பாடம் நடத்தியவருமான காவல்துறை உயரதிகாரிதான் (உபேந்திரா) கொலையாளி.

உபேந்திரா கொலைக்காரன் ஆனது ஏன்? அவரது நோக்கம் என்ன? குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே தொடங்கும் மோதலின் முடிவு என்ன?

கதையும் களமும் சுவாரஸ்யம் தரக்கூடியது என்பது உண்மையே.ஆனால், திரைக்கதை சொதப்பல் என்பதால் 'சத்யம்' நிலைநாட்டப்படவில்லை என்பது பேருண்மை. விஷாலின் சிக்ஸ்-அப் தேகத்தாலும் வலு சேர்க்க முடியாதது பெரும் சோகம்.

காக்கிச்சட்டையில் சற்று ஒல்லியாகவே தெரிவதும் கம்பீரத்துக்கு தடை சேர்க்கிறது.எனினும், நடிப்பில் மிளிரவே செய்கிறார்.ஆனால்,முதுகில் கத்திக் குத்து வாங்கிய பிறகு சிற்றூரையே சிதறடிப்பது கொஞ்சம் ஓவர்.

கெஸ்ட் ரோல் என்றாலும் பேஸ்ட்டாக மனதில் ஒட்டிக் கொள்கிறார், உபேந்திரா.

நயன்தாரா டி.வி. நிருபராம். ஆனால், அவரது நடை, உடை, பாவனைகள் எஃப் சேன்லை நினைவுபடுத்துகின்றன. நயன்தாராவிடம் உதை வாங்கும் ராம்ஜியின் நகைச்சுவை, மொத்தமும் வீண் என்றே சொல்ல வேண்டும்.

ஆக்‪ஷன் கதையில் தாய் - மகன் சென்டிமென்ட் வேறு. சுதா சந்திரனை சோபிக்கவைக்கவில்லை.

'என் அன்பே...', 'பால் பப்பாளி...' ஆகிய பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் முன்னணியில் இல்லை. படத்துக்கு ஆறுதல் அளிக்கும் அம்சங்களில் ஒன்று, ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு.

க்ளைமாக்ஸ் கூட கொட்டாவி விட வைப்பது சத்யத்தின் உச்சகட்ட சோதனை.

மொத்தத்தில்... விஷாலின் சத்யம் - வெல்லவில்லை!


--
People Of Thambiluvil

சரோஜா'வுக்கு சிக்கல் தந்த 'குசேலன்'!

ரஜினிகாந்தின் குசேலன் பட பிரச்சனையால், சரோஜா வெளியாவதில் சிக்கல் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறது!

சரோஜாவுக்கும் குசேலனுக்கும் என்ன சம்மந்தம்?

இவ்விரு படங்களுடைய வினியோக உரிமைகளையும் பெற்றிருப்பது, பிரமிட் சாய்மீரா என்பதினாலாயே இந்தச் சிக்கல்கள். முழு விவரம் இதோ...

குசேலனால் நஷ்டமடைந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு, சூப்பர்ஸ்டார் ரஜினி உள்ளிட்ட படக்குழு 35 சதவிகித நஷ்டஈடு தர ஒப்புக்கொண்டது.

ஆனால், பீகார் வெள்ளத்தைப் போல பெருநஷ்டத்தில் மூழ்கிய திரையரங்கு உரிமையாளர்களோ, "நஷ்டஈடு போதாது.75 சதவிகிதம் வேண்டும் (ரூ.14 கோடி)," என போர்க்கொடியை உயர்த்தினர்.

இதுபற்றி, எதிர்பார்த்த ரியாக்‌ஷனை இதுவரை குசேலன் தரப்பு தரவில்லை!
இதனால் வெகுண்டெழுந்த திரையரங்கு உரிமையாளர்கள், 'எங்கே அடித்தால், எங்கே வலிக்கும்' என்பதை உணர்ந்து, பிரமிட் சாய்மீரா பக்கம் சாய்ந்துள்ளனர்.

"குசேலனுக்கு நாங்கள் கேட்ட நஷ்டஈடு தரப்படவில்லை எனில், குசேலனை வினியோகித்த பிரமிட் சாய்மீராவின் 'சரோஜா'வை புறக்கணிப்போம்," என்று அவர் மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

இதனால், சரோஜாவுக்கு சிக்கல் நீடித்துள்ளது. நாளை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், ஏற்கெனவே அடுத்த மாதம் (செப்.) 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் குசேலன் பிரச்சனையால், சரோஜா வெளிவர மேலும் தாமதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றிய இறுதி நிலை என்னவென்று, வரும் 1-ம் தேதியே தெரியவரும். காரணம், அன்றைக்குத்தான் 'குசேலன்' பிரச்சனை பற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டில், தமிழகம் முழுவதும் சுமார் 850 திரையரங்குகள் உள்ளன என்பது சாய்மீராவுக்காக இங்கே நினைவுகூறத்தக்கது.


--
People Of Thambiluvil

Monday, August 25, 2008

நிறைவடைந்தது பீஜிங் ஒலிம்பிக்

கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள், கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகளுடன் ஆகஸ்டு 24 அன்று நிறைவடைந்தன.Photo: Fireworks explode

உலகின் பார்வையைத் தன் வசம் வைத்திருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. கடைசி நாளான ஆகஸ்டு 24 அன்று தடகளம், கூடைப் பந்து, குத்துச் சண்டை, ரித்மிக் ஜின்னாஸ்டிக், கால்பந்து, வாட்டர்போலோ ஆகிய பிரிவுகளில் 12 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடந்தன.

தொடக்க நிகழ்ச்சியில் 15,000 கலைஞர்கள் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பிரமிக்க வைத்தனர். நிறைவு விழாவில் 7,000 கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.



--
Photos: Fireworks light up night sky

Fireworks light up night sky during the Closing Ceremony for the Beijing 2008 Olympic Games on August 24, 2008 in Beijing, China.


People Of Thambiluvil

Sunday, August 17, 2008

பதினெட்டு மொழியில் ரஜினி படம்!


அனிமேஷன் படம் குழந்தைகளுக்கானது. இந்த இந்திய மனப்பான்மையை சிதறிடிப்பதுபோல் தயாராகி வருகிறது செளந்தர்யாவின் சுல்தான் தி வாரியர்.

செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவும், அட்லாப்சும் இணைந்து தயாரிக்கும் இதன் உத்தேச பட்ஜெட் அறுபடி கோடிக்கும் மேல். இந்திய நடிகர் ஒருவரை வைத்து முழு நீள அனிமேஷன் படம் தயாராவது இந்தியாவில் இதுவே முதல் முறை.

இன்னொரு சாதனை, சுல்தான் பேசப் போகும் மொழிகள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச் உள்பட பதினெட்டு மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிடுகிறார்களாம்.

இந்திய திரைப்படமொன்று இத்தனை மொழிகளில் டப் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

ரஜினி பாய்ந்தது பதினாறு அடி என்றால் மகளின் இலக்கு முப்பத்தியிரண்டு. புலியின் மகளல்லவா... தாண்டினாலும் தாண்டுவார்!

--
People Of Thambiluvil

குசேலன் இரண்டாவது எடிட்டிங்!

குசேலன் படம் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்தாலும் வசூலில் சாதனை படைக்கவில்லை. காரணம் ரஜினி படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததுதான்.

தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி சூப்பர் ஸ்டாரை பயன்படுத்தவில்லை என்ற கோபம் ஒருபுறம் இருக்க, பாடல்களும் சுமார் ரகமாக இருக்கிறது என்ற கமெண்ட் ஒருபுறம். அத்தோடு நிருபராக வரும் இயக்குனர் சுந்தர்ராஜன் ரஜினியிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு ரஜினி சொல்லும் பதில்களும் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டு தமிழ் ரசிகர்களின் மனதை வேதனைப் படுத்தப்பட்டதாக ஏகப்பட்ட கண்டனக் குரலுக்கு ஆளான ரஜினி. இந்த கேள்வி பதிலுக்கு ரசிகர்களிடம் ஏற்பட்ட வருத்தத்தை உணர்ந்த ரஜினி, உடனடியாக ரசிகர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கும்படி இயக்குனரை கேட்டுக் கொண்டார்.

அதன்படி தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து தியேட்டர்களின் பிரிண்ட்டுகளை மீண்டும் எடிட் செய்து அந்த காட்சிகளை நீக்கியிருக்கிறார்.

எது எப்படியோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதையாக, ரசிகர்களின் எதிர்ப்புக்கு சமாதானம் செய்ததோடு, கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட விவகாரமும் லேசாக மறையத் தொடங்கிவிட்டன.


--
People Of Thambiluvil

Saturday, August 16, 2008

ஆ‌ன்‌னி- ஹா‌லிவு‌ட் நய‌ன்தாரா


ஆ‌ன்‌னி ஹே‌‌த்வே-‌க்கு‌ம் நய‌ன்தாராவு‌க்கு‌ம் ஒரே ‌பிர‌ச்சனை. எ‌ப்போதோ பா‌ய் ‌பிரெ‌ண்டுட‌ன் அ‌ன்‌னியோ‌‌ன்யமாக இரு‌ந்த புகை‌ப்பட‌ங்க‌ள் இ‌ப்போது வெ‌ளியா‌கி புய‌ல் ‌கிள‌ப்பு‌கி‌ன்றன.

ஆ‌ன்ன‌ி தனது மு‌ன்னா‌ள் பா‌ய் ‌பிரெ‌ண்‌ட்டுட‌ன் நெரு‌க்கமாக இரு‌ந்த கா‌ட்‌சிகளையு‌ம், அவரது ‌நி‌ர்வாண புகை‌ப்பட‌த்தையு‌ம் ‌விரை‌வி‌ல் வெ‌ளி‌யிடுவதாக இணையதள‌ம் ஒ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளது.


சொ‌ன்னபடி அ‌ந்த இணையதள‌ம் புகை‌ப்பட‌ங்களை வெ‌ளி‌யி‌ட்டு மான‌த்தை (?) வா‌ங்கு‌ம் மு‌ன் ஆ‌ன்‌னி அவ‌ற்றை கை‌ப்ப‌ற்‌றியாக வே‌ண்டு‌ம். தனது சகோதர‌ன் மை‌க்கேலுட‌ன் அ‌த‌ற்கான முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்‌கியு‌ள்ளா‌ர் ஆ‌ன்‌னி.

நியூயா‌ர்‌க்‌கிலு‌ள்ள பா‌ய்‌பிரெ‌ண்டி‌ன் இரு‌ப்‌பிட‌த்‌தி‌ல் அவை இரு‌க்கலா‌ம் எ‌ன்பது அவரது க‌ணி‌ப்பு.

ஆ‌ன்‌னி இ‌ன்னு‌ம் இளமையாக (25 வயது) இரு‌ந்தபோது எடு‌‌த்த பட‌ங்க‌ள் அவை. ஆ‌ன்‌னி கை‌யி‌ல் ‌சி‌க்க‌க் கூடாது எ‌ன ‌பிரா‌ர்‌த்‌தி‌த்து வரு‌கிறா‌ர்க‌ள் அவரது ர‌சிக‌ர்க‌ள்.
--
People Of Thambiluvil

படம் இயக்குகிறார் ரஜினி மகள்!

செளந்தர்யா ரஜினியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷும் படம் இயக்குகிறார்.

டைரக்சன் தனுஷின் கனவு. விரைவில் படம் இயக்குவேன் என்று ஒரு வருடத்திற்கு மன்பே அறிவித்தவரை, முதலில் நடிப்பில் கவனம் வை என அடக்கி வைத்திருக்கிறது அவரது குடும்பம். அவருக்கு பதில் இயக்கத்தில் குதிக்கிறார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உள்ளூர் படப்பிடிப்பில் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த இவரின் அதிகபட்ச டார்கெட், தனது தந்தையை அதாவது ரஜினியை இயக்குவது. அதற்குமுன் வேறு ஹீரோவை வைத்து படம் இயக்குகிறார்.

அந்த வேறு ஹீரோ தனுஷா என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. அட்வான்ஸ் வாங்கிய படங்களை நடித்து முடிக்கவே தனுஷுக்கு இரண்டு வருடம் ஆகிவிடும். அதனால் ஐஸ்வர்யாவின் முதல்பட ஹீரோ யார் என்பது இன்னும் கோடிட்ட இடமாக நிரப்பப்படாமல் உள்ளது.

--
People Of Thambiluvil

Wednesday, August 6, 2008

அஜீத் மீண்டும் இரட்டை வேடம்!

அஜீத் ரசிகர்களுக்கு இன்னமொரு சந்தோஷ செய்தி. மீண்டும் ஒரு இரட்டை வேட ரீமேக் கதையில் நடிக்கிறார் அஜீத்.

தற்போது ஏகன் திரைப்படத்தில் நடித்துவரும் அஜீத், சிவாஜி பிலிம்ஸ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்தின் சொந்தப் படம் (பில்லா -2) ஆகியவற்றை முடித்துவிட்டு அசோக் அமிர்தராஜின் படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்காக இந்தியில் சைப் அலிகான்- அக்ஷய் கன்னா நடித்த சூப்பர் ஹிட் படமான ரேஸ் படத்தை ரீமேக் செய்கிறார்கள்.

முதலில் இந்தப் படத்தை இரு கதாநாயகர்கள் கொண்ட படமாக எடுக்கவே விரும்பினாராம் அசோக் அமிர்தராஜ். ஆனால் படத்தைப் பார்த்த அஜீத், தானே இரு வேடங்களிலும் நடிப்பதாகத் தெரிவித்துவிட்டதால், மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம் அசோக்.

இந்தப் படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

தற்போது அஜீத் நடிக்கும் ஏகன் படம், ஷாரூக்கானின் மே ஹூன் நாவின் தழுவல் என்பது தெரியும்தானே...

ரீமேக் செண்டிமென்ட்டுக்கு 'தல'யும் தப்பல?!



--
People Of Thambiluvil

Sunday, August 3, 2008

குசேலன் திரை விமர்சனம்


நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன்.

ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம்.

Tamilwin.comமலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.இரண்டு நண்பர்களுக்கிடையிலான நட்புதான் இந்தக் கதையின் அடிநாதம். மறையூர் கிராமத்தில் ஒரு ஓட்டை சலூன் வைத்திருக்கும் நேர்மையான ஏழை பாலு (பசுபதி). அன்றாட பிழைப்புக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டாலும், காதல் மனைவி ஸ்ரீதேவி (மீனா) மற்றும் மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறான்.

தனது பழைய சலூனைப் புதுப்பிக்க எங்கெங்கோ கடன் கேட்கிறார். அவனது நேர்மை யாருக்கும் அவனை லஞ்சம் கொடுக்க விடாமல் தடுக்கிறது. அதன் விளைவு எந்த அரசு வங்கியிலும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

Tamilwin.comஆனால் அவரிடம் உதவியாளராக இருந்த சலூன் சண்முகம் (வடிவேலு), நடைமுறையைப் புரிந்து தகிடுதத்தம் செய்து பெரிய நவீன சலூனைத் திறந்து ஏராளமாய் சம்பாதிக்கிறார்.

ஒருநாள் அந்த கிராமத்தின் இயல்பே தலைகீழாக மாறிப்போகிறது. காரணம் நாடே போற்றும் சூப்பர்ஸ்டார் அசோக்குமார் (ரஜினி) அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார். இந்தப் படப்பிடிப்பால் கிராமத்திலுள்ள பலருக்கும் இதனால் வேலை கிடைக்கிறது. எல்லோர் கையிலும் பணம் புரள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் சலூன் பாலு, சூப்பர்ஸ்டார் அசோக்குமாரின் நெருங்கிய நண்பன் என்ற உண்மை கிராமத்தினர் மத்தியில் கசிகிறது. இதையடுத்து பாலுவை, ஊரே கொண்டாடத் துவங்குகிறது.

Tamilwin.comஊரே சூப்பர்ஸ்டாரை தரிசிக்க அவரது கெஸ்ட் அவுஸ் முன் தவம் கிடக்கிறது. ஆனால், தன் பழைய நண்பன் தன்னை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையில் அவரைப் பார்க்கப் போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் பாலு.

நிர்பந்தம் காரணமாக ஒருமுறை பார்க்கப் போக, அங்குள்ள கடும் காவல் அவரை மெளனமாய் திரும்ப வைக்கிறது.

ஷூட்டிங் முடிந்து அசோக்குமார் ஊரைவிட்டுக் கிளம்பும் கடைசிநாள் ஒரு பள்ளியின் விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பின் மனைவியுடன் புறப்படுகிறார் பாலு.

அடுத்த சில நிமிடங்களில் யாருமே எதிர்பார்க்காத உணர்ச்சிப் பிரவாகமான காட்சிகள் அரங்கேற, விழா நடக்கும் பள்ளியே உருகி உறைந்து போகிறது. இரு நண்பர்களும் எப்படிச் சேர்ந்தார்கள் என்பது இறுதிக் காட்சி.

Tamilwin.com

படத்தின் ஆரம்பத்தில் ரஜினியின் ஆவேச ரசிகர்களாய் உள்ளே நுழையும் அத்தனைபேரும் ஒருவித நெகிழ்வுடன் வெளியேறும் காட்சியை ரொம்ப நாளைக்குப் பிறகு குசேலனில் பார்க்கலாம்.

நல்ல படத்துக்கு உயரிய தொழில் நுட்பமோ, வெளிநாட்டு சூட்டிங்கோ, பஞ்ச் டயலாக்கோ, பஞ்சர் டயலாக்கோ, கோடிகளைக் கொட்டி செட் போடுவதோ தேவையே இல்லை என்பது இந்தப் படம் உணர்த்தும் முக்கியப் பாடம்.

குசேலனில் ரஜினி தோன்றுவது வெறும் 40 நிமிடங்கள்தான் இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தப் படத்திலும் அவரே நிறைந்திருப்பது போன்ற மேஜிக்கை நிகழ்த்தியிருப்பது கதை எழுதிய சீனிவாசன் மற்றும் இயக்கிய வாசுவின் தனித் திறமை.

அதிரடி, ரகளையான அறிமுகப் பாடல் கிடையாது. காற்றில் பறந்து பறந்து அடிக்கும் ஸ்டண்டுகள் கிடையாது. தனியான பஞ்ச் வசனங்களும் கிடையாது. வெளிநாட்டு லொக்கேஷன்களில் பாடல் காட்சிகள் கிடையாது. ஆனாலும் படத்தின் கதையால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் ரஜினி.

'மாதா, பிதா, குரு, நல்ல நண்பன், தெய்வம் – இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் புதிய மந்திரம்' எனும் ரஜினி, தனது வாழ்க்கைக்கு விளக்கேற்றிய நண்பனைப் பற்றிச் சொல்லும் காட்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சரியான பாடம்.

Tamilwin.comகிளைமாக்ஸுக்கு முந்திய பள்ளி விழாவில் கலங்கிய விழிகளுடன் ரஜினி தன் நண்பனை நினைவு கூறும்போது கல்லும் கரையும்.

ரஜின் ஏன் இமயமலைக்குப் போகிறார்... அரசியலில் ஏன் அடிக்கடி குழப்புகிறார், சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டே சந்நியாசி வாழ்க்கையை ஏன் வாழ்கிறார்? என்று கேள்வி-பதில் காட்சியும் படத்தில் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு ரஜினியே அதற்கு பதில் சொல்கிறார்.

பசுபதி... இந்தப் பாத்திரத்துக்கென்றே வார்க்கப்பட்டவர் போல அப்படியொரு கச்சிதம். 'அந்தப் பெரிய நடிகர் வந்ததால என் தூக்கம் போச்சி, அந்த விளக்கை அணைச்சிடு... அதுவாவது நிம்மதியா தூங்கட்டும்', என்று அவர் மனைவியுடன் பேசும்போது தம்மை மறந்து கைதட்டுகிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாராவுக்கு ஒரு வேலையும் கிடையாது. இரு பாடல் காட்சிகளில் வந்து போகிறார். குறைந்த காட்சிகளில் மிகக் குறைந்த உடையுடன் வந்து தந்த வேலையை நிறைவு செய்கிறார்.

கதபறயும் போளில் செய்த அதே வேடம் தான் இதில் மீனாவுக்கு. திரும்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார் கண்ணழகி.

படத்தில் பின்னி எடுக்கும் இன்னொரு கேரக்டர் வடிவேலு. வாவ்... வடிவேலுக்குள் எத்தனை பெரிய, அரிய நகைச்சுவைக் கலைஞர்..? பிரமிக்க வைக்கிறார்.

வாசுவின் படத்துக்கே உரிய ஏராளமான நட்சத்திர பட்டாளம் இதிலும் உண்டு. பிரபு, லிவிங்ஸ்டன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, விஜயகுமார் என திரை நிறைய ஏகப்பட்ட பேர். அவரவர் பாத்திரங்களில் நச்சென்று நடித்திருக்கிறார்கள்.

ஆனாலும் படத்தில் மகா வெட்டியாக வந்து போவது 'சின்னதம்பி' பிரபு. ( சந்திரமுகி செண்டிமெண்ட் போல..)

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பிரகாஷ் குமாரின் இசையும் குறைசொல்லும்படி இல்லை. பேரின்பப் பேச்சுக்காரன்..., போக்கிரி ராஜா... பாடல்கள் அருமை.

நயன்தாரா தனியாகப் பாடும் அந்த மழைப் பாடல் படு செயற்கை.

குசேலன்- கதை தரத்தில் குபேரன்!


--
People Of Thambiluvil

விஜயகாந்தோடு இணைந்து நடிப்பேன் சரத்குமார் அதிரடி பேட்டி

சரத்குமாரின் கனவுப்படம் 1977. தினேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

படம் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்ட சரத் ஜாலி முடில் இருந்தார். 3 மணி நேரம் ஓடுகிற படமாமே இது? என்றால், அது என்னவோ தெரியாது. ஆனால் தியேட்டரில் 300 நாள் ஓடும் என்றார் பளிச்சென்று. சிக்ஸ் பேக்குகளை காட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோக்களுக்கு மத்தியில் சரத்குமார் காட்டியிருப்பது எய்ட் பேக்ஸ்! பக்கத்தில் இருக்கிற நமீதாவும் அதே நச் உடம்போடு நிற்க, அவங்க எய்ட் பேக்ஸான்னு கேட்காதீங்க என்றார். இந்த படத்தில் நமீதா லாயரா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு நிறைய க்ளையன்ட்ஸ் உண்டு. நமீதாவுக்கு நான் நன்றி சொல்லணும். ஏன்னா, ரொம்ப கஷ்டப்பட்டு மேலேயிருந்து கீழே குதிச்சிருக்காங்க. அப்படியே ரயிலில் ஏறி, அதிலிருந்து மீண்டும் குதித்து பஸ்சிற்குள் தாவி... இந்தப்படத்தில் நமீதாவின் ஆக்ஷன் அதிகம். சிரமப்பட்டாவது நடிச்சு கொடுத்தற்கு நன்றி என்றார்.

ஜக்குபாய் படத்தை பற்றி கேட்டபோது, சூப்பர் ஸ்டார் நடிச்சா என்ன? சுப்ரீம் ஸ்டார் நடிச்சா என்ன? இரண்டும் ஒன்றுதான். அதிலே அவர் போர்வையை போர்த்தியிருந்தாரு. பக்கத்தில் துப்பாக்கி இருந்திச்சு. இதிலே துப்பாக்கியை கையில் வச்சிருக்கேன். இறுக்கமான ஜீன்ஸ் போட்டிருக்கேன், அவ்வளவுதான் என்றார் சரத். நல்ல கதை கிடைத்தால் விஜயகாந்துடன் இணைந்து நடிக்கவும் தயார் என்றவர், நான் வேட்டி கட்டி, இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் எல்லாம் எப்படி ஹிட் ஆனதோ, அதைப்போலவே இந்த 1977 படமும் ஹிட் ஆகும். ஆனால் இதில் நான் வேட்டிக்கு பதில் ஜீன்ஸ் போட்டிருக்கிறேன் என்றார்.

இரண்டு நிமிட விளம்பர படத்திலேயே ஜாலம் காட்டும் இயக்குனர், இரண்டரை மணி நேரம் கொடுத்தால் சும்மா பிய்த்து உதறியிருக்க மாட்டாரா என்ன?



--
People Of Thambiluvil

Saturday, August 2, 2008

"பாடம் கற்றுக் கொண்டேன்" ரஜினி

சென்னை, ஆக. 2: தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் "தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா..?"

என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அப்படி பேசியிருக்கக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.  இந்த விஷயத்திலிருந்து தான் பாடம் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

"குசேலன்" படத்தில் பணியாற்றிய 70 தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் சார்பில் ரூ.20 லட்சம், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும்போது...

"குசேலன்' பட யூனிட்டில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நான் கூறியவுடன் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி நான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

ஒகேனக்கல் பிரச்னை தொடர்பாக நான் சொல்ல வேண்டிய கருத்துகளை என்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சொல்லிவிட்டார். இதற்கு மேல் நான் எதையும் பேச விரும்பவில்லை.

ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒகேனக்கல் திட்டத்துக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "உதைக்கணும்' என்று பேசியதை கர்நாடகத்தில் உள்ள எல்லோரையும் உதைக்க வேண்டும் என புரிந்துகொண்டனர்.

"இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி யார் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை' என்ற வார்த்தைகளைச் சேர்க்காமல் பேசியது பிரச்னையாகிவிட்டது.

வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவமும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. இந்தச் சம்பவம் மூலம் நானும் பாடம் கற்றுக்கொண்டேன் என விளக்கமளித்தார்.



--
People Of Thambiluvil