தசாவதாரம்
கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் உலகம் முழுவதும் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக ரிலீஸ் ஆகிறது.
12ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரிலீஸாகிறது. 13ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் ஜூன் 8ம் தேதி ரிசர்வேஷன் தொடங்குகிறதாம். சென்னையில் (நகரில் மட்டும்) மொத்தம் 20 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. இந்தத் தியேட்டர்களில் 74 காட்சிகள் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது. புறநகர்களையும் சேர்த்தால் 30 தியேட்டர்களைத் தாண்டும்
படத்திற்கு 1000 க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படவுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் தசாவதாரம் ரிலீஸாகிறது.
படம் ஜூன் 13ம் தேதி ரிலீஸாவது உறுதி என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே தசாவதாரம் படத்தின் கதை குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது.
அந்த 10 வேடங்கள்:
நம்பி என்ற வைணவர், பத்தடி உயர கலிஃபுல்லா, அமெரிக்க புஷ், பாடகர் அவதார் சிங், அமெரிக்க விஞ்ஞானியாக, ஜப்பானியராக, மூதாட்டி கிருஷ்ணா பாட்டி, ஆப்பிரிக்க நீக்ரோ, வழக்கமான ஹீரோ, கஸ்டம்ஸ் அதிகாரி பல்ராம் நாயுடு.
படத்தின் கதை..:
இதுதான் தசாவதாரம் படத்தின் கதையாம் .. அமெரிக்க அணு மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானி கமல், அணுப் பிளவு தொடர்பாக மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த கண்டுபிடிப்பை திருட முயல்கிறது ஒரு கேங். இந்த வில்லன் கும்பலுக்கு தலைவர் இன்னொரு கமல்.
இதையடுத்து விஞ்ஞானி கமல், அணுப் பிளவு ரகசியத்தை பத்திரப்படுத்த முடிவு செய்து, அதை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த ரகசியம், 90 வயதுப் பாட்டி ஒருவரிடம் (பாட்டியும் கமலே) வந்து சேருகிறது.
இதையடுத்து பாட்டியிடம் ரகசியத்தை அபகரிக்க வில்லன் கும்பல் முயலுகிறது. அது நிறைவேறுகிறதா, என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸாம்.
படத்தில் ஜார்ஜ் புஷ், ஆப்பிரிக்க நீக்ரோ உள்ளிட்ட வேடங்களில் கமல் அசத்தியுள்ளாராம். அவரது பத்து அவதாரங்களும் ரசிகர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்குமாம்.
படத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட இருக்கிறார்கள். அதாவது ஒரு காட்சியில் வந்து போகிறார்கள். இவர்கள் கமல் போட்ட கெட்டப் அல்ல, நிஜ கருணாநிதி, ஜெயலலிதாதான்.
உலக சினிமாவில் ஒரு நடிகர் 10 வேடங்கள் போட்டிருப்பது இதுவே முதல் முறையாம். படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளதால் பட்ஜெட் ரூ. 65 கோடியைத் தொட்டு விட்டதாம்.
No comments:
Post a Comment