quality="high"
type="application/x-shockwave-flash"
WMODE="transparent"
width="826"
height="125"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
allowScriptAccess="always" />

Sunday, June 22, 2008

இலங்கை மோதல்களில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் பலி

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
"வியட்நாமில் இருந்து போஸ்னியா வரை ஐம்பது ஆண்டு கால போர் வன்முறை உயிரிழப்புகள்: உலக சுகாதார ஆய்வு திட்ட தரவின் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது.
'போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது. மேலும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை' என்கிறது இந்த ஆய்வு.
கடந்த 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரில் 58,000 பேர் பலியானதாக, முந்தைய ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. ஆனால், இந்தப் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,69,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று இப்புதிய ஆய்வு கணக்கிட்டுள்ளது.
அதேபோல், விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளதாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை சுமார் 61,000 மட்டுமே என்று முந்தைய ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments: