கராச்சி: ஆசியாவின் மிகச்சிறந்த பேட்டிங் வீரர் என்ற விருதினை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கியுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
ஆசிய கண்டத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீர்ர்களுக்கான விருதுகளை ஆண்டுதோறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு விருது வழங்கும் விழா கராச்சியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர் என்ற விருதினை இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். காயம் காரணமாக டெண்டுல்கர் ஓய்வெடுத்து வருவதால் அவருக்கு பதில் டோணி அந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக சங்கக்கராவும் பந்து வீச்சாளராக முத்தையா முரளிதரனும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக மகரூப்புக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற நால்வரில் மூவர் இலங்கை அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விருது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.