quality="high"
type="application/x-shockwave-flash"
WMODE="transparent"
width="826"
height="125"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
allowScriptAccess="always" />

Monday, October 27, 2008

சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து

]
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் "ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.

இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது,

"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

இதேவேளை, ஜேர்மன் மற்றும் டென்மார்க் நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

--
People Of Thambiluvil www.thirukkovil.com

Thursday, October 23, 2008

ஏகன் - திரைவிமர்சனம்


இராணுவத்துல இருக்கிற ஒரு அதிகாரி ஏகன். அவருக்கு அவருடைய மேலதிகாரி ராகவன் மேல மரியாதை கலந்த மதிப்புமட்டுமில்லாம் பாசமும் அதிகம். அவருடைய மேலதிகாரிொரு தகவல் வருது, அதுல அவருடைய மகன் மற்றும் மனைவியை தீவிரவாதிங்க கொலை செய்ய திட்டமிட்டுருக்காங்கன்னு தெரியவருது. அதனால அவருடைய சீடன் ஏகனை மகன் மற்றும் மனைவியை காக்க அனுப்புறார்.





அவருடைய மகன் லக்கி அந்தக் கல்லூரியின் HotGuy. எல்லாப் பொண்ணுங்களும் அவருக்கு பின்னாடியே சுத்த இவர் மட்டும் பூஜாவோட காதலுல சுத்துறாரு. ஏகன் ஒரு கல்லூரி மாணவரா சேர்ந்து அந்தக்கல்லூரிக்கு போயி லக்கிய அவருக்கு தெரியாமையே பின் தொடர்ந்து காக்குறாரு. ஒரு சமயத்துல ஏகனுக்கு அந்தக்கல்லூரியின் வேதியியல் விரிவுரையாளரோட chemistry வொர்கவுட் ஆகிருது. இந்த சமயத்துல ஏகனும், லக்கியோட வீட்டுல தங்கி அவங்க அம்மாவுக்கு ஒரு மகனாவே பாசத்துக்கு கட்டுப்பட்டுடறாரு.




இந்தச் சமயத்துல லக்கிக்கு, ஏகன் பின் தொடர்ந்து வர்றது தெரிஞ்சு போகவே ஏகன் மேல லக்கிக்கு வெறுப்பு வந்துருது. நடுவே நடுவே லக்கிமேல தீவிரவாதிங்க தாக்க முயற்சி பண்ண ஏகன் காப்பாத்துறாரு. ஒரு கட்டத்துல ஒட்டுமொத்த கல்லூரியையும் தீவிரவாதிங்க சுத்தி வளைச்சு, லக்கியோட உயிரைப் பணயாமாக் கேட்க ஏகன் எப்படி லக்கியையும் காப்பாத்தி, அவரோட பாசத்தையும் சம்பாதிச்சு, கடமையை ஆத்துறாருங்கிறது Climax.
பின்குறிப்பு: இது Main Hoon na கதை. ஏகன்=இராம்ன்னு மாத்துனதோட நம்ம வேலை முடிஞ்சிருச்சு. இந்தியில கொடுமையா இருந்துச்சு. தமிழ்ல எப்படி எடுத்திருப்பாங்கன்னு தெரியலை.

--
People Of Thambiluvil www.thirukkovil.com

Monday, October 20, 2008

ரஜனி, கமல் உட்பட மூவாயிரம் நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க தயார்

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாந்திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது.

நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, பரத், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், ஸ்ரேயா, அசின், நயன்தாரா, திரிஷா, பிரியாமணி, பாவனா, சந்தியா, நமீதா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் எல்லோருக்கும் கடிதங்கள் அனுப்பப்படுகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாந்திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாந்திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.



--
People Of Thambiluvil www.thirukkovil.com

Saturday, October 18, 2008

சூர்யா படத்துக்கு மிரட்டல்

கடவுள் விஷயத்தோடு தங்கள் எல்லையை முடித்துக் கொள்ளும் மதவாத கட்சிகள் அவ்வப்போது பொதுப் பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும். பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட் இல்லலாததால் இந்த மக்கள் கட்சி அப்படியொரு பிரச்சனையில் தனது மூக்கை நுழைத்துள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் உண்ணாவிதம் இருந்தபோது நடிகை திவ்யா அதில் கலந்து கொள்ளவில்லை. மாறாக தமிழர்களுக்கு போட்டியாக கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த திவ்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அவர் நடித்த வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் டி. கண்ணன்.

தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட சூர்யா, கெளதம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை டி. கண்ணன் மற்றும் வகையறாக்கள் புரிந்துகொள்ள மறுப்பது விந்தையிலும் விந்தை!


--
People Of Thambiluvil www.thirukkovil.com

Friday, October 10, 2008

காதலில் விழுந்தேன் - ‌திரைவிம‌ர்சன‌ம்

கொஞ்சம் குணா, கொஞ்சம் காதல் கொண்டேன். இரண்டையும் கூட்டிப் பிசைந்தால் அதுதான் காதலில் விழுந்தேன்.

ஒரு விபத்தின் மூலம் பட்டினப்பாக்கம் நகுலுக்கும், கோடீஸ்வர வா‌ரிசான சுனேனாவுக்கும் காதல் பிறக்கிறது. திடீரென்று ஒருநாள் சுனேனா இறந்து விடுகிறார்.
webdunia photo WD

அவர் மீது அதீத காதல் கொண்ட நகுலன் சுனேனா இறந்ததை நம்ப மறுக்கிறார். அவரது பிணத்தை ூக்கிக் கொண்டு ஓடுகிறார். அவரை போலீஸ் துரத்துகிறது. இறுதியில் நகுல் என்ன ஆனார் என்பதை சஸ்பென்ஸ் சேர்த்து சொல்லியிருக்கிறார்.

பாய்ஸில் பீப்பாய் மாதி‌ரி இருந்த நகுல் டீக்காக வருவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. சுனேனாவை அவர் காட்டுத் தனமாக காதலிப்பதும், அவரது பிணத்தை சுமந்து கொண்டு ஓடுவதும் திரைக்கதையை ூடு வைத்த ஆட்டோ மீட்டராக்குகிறது. பாடல் காட்சியிலும், சண்டை காட்சியிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார்.

இயல்பான நடிப்பில் சுனேனா. அம்மாவை நினைத்து உருகும் போது ப‌ரிதாபப்பட வைக்கிறார். போலீஸ் அதிகா‌ரியாக சம்பத். நகுலனை அவர் வெறி கொண்டு துரத்துவது ரசிக்க வைக்கிறது. டிக்கெட் ப‌ரிசோதகராக வரும் லிவிங்ஸ்டன் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

விஜய் ஆண்டனியின் நாக்க முக்க பாடல்தான் படத்தின் முகவ‌ரி. பாடல் வரும் இரண்டு முறையும் எழுந்து ஆடுகிறார்கள். தோழியா காதலியா பாடலும், உன் தலைமுடி பாடலும் விஜய் ஆண்டனியின் மெலடி திறமைக்கு சான்றுகள். ஊட்டியின் அழகை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

நம்ப முடியாத கதை, நம்ப முடியாத காட்சிகள். அதனை ரசிக்கும்படி செய்திருப்பது ஒன்றே படத்தை காப்பாற்றுகிறது.


--
People Of Thambiluvil www.thirukkovil.com