quality="high"
type="application/x-shockwave-flash"
WMODE="transparent"
width="826"
height="125"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
allowScriptAccess="always" />

Thursday, April 24, 2008

சந்தோஷ் சுப்ரமணியம் திரை விமர்சனம்


சந்தோஷ் சுப்ரமணியம் -->
பொத்தல் விழுந்த தந்தை - மகன் உறவுகளுக்கு அழகான எம்ராயிடிங் போடும் கதை.
மகனின் கேட்காத தேவைகளையும் பூர்த்தியாக்குவதில் சுகம் காணும் தந்தை பிரகாஷ்ராஜ். கேட்டதை மட்டும் செய்தால் போதும் என சுதந்திரம் விரும்பும் மகன் ஜெயம்ரவி. வாகனத்திலிருந்து வாழ்க்கை துணை வரை அப்பாவின் விருப்பத்திற்கு தலையாட்டிவரும் ஜெயம்ரவிக்கும் விஜயக்குமாரின் மகள் கீரத்துக்கும் திருமணம் நிச்சயமாகிறது.
கல்யாண விஷயத்திலாவது தான் விரும்பிய பெண்ணை மணக்க வேண்டும் என நினைக்கும் ஜெயம்ரவியின் ஆசை ஜெனிலியாவை பார்த்ததும் தோகை விரித்து ஆடுகிறது. நீருபூத்திருந்த தனது எண்ணத்தை அப்பாவிடம் சொல்ல நெருப்பாக கொதிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
நீ விரும்பிய பெண்ணை ஒரு வாரம் நமது வீட்டில் தங்கச்சொல். நமக்கேற்றபடி அவள் இருந்தால் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறேன் என பரீ்ட்சை வைக்கிறார் பிரகாஷ்ராஜ். ஜெயம்ரவியின் வீ்ட்டுக்கு ஜெனிலியாவும் வருகிறார். பரீட்சையில் ஜெயம்ரவி - ஜெனிலியாவுக்கும் கிடைக்கும் ரிசல்ட் மீதி கதை.
கூண்டில் அடைபட்ட குயிலாக, அப்பாவின் எண்ணத்திற்கு வளைந்து கொடுக்கும் ஜெயம்ரவி, தனது விருப்பங்கள் போன்சாய் மரமாகிவிடும் நிலையை எண்ணி கலங்குவது உருக்கம்.
இளைஞர்களின் உலகம், வீட்டுக் வெளியிலும் வீட்டுக்குள்ளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதற்கு சாம்பிள்தரும் ரவியின் நண்பர்கள் உலகம் ஜாலி குளோபல்.
ஜெனிலியாவின் நடிப்பில் இப்போது கொம்பு முளைத்துவிட்டது. பாணிபூரி விற்பவனில் ஆரம்பித்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்வரை பழக்கம் வைத்திருக்கும் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தும் ஜெனிலியாவின் கேரக்டர் இன்ட்ரஸ்டிங் ஷோ.
அரைலூஸாக சுற்றித்திரிந்தாலும் அவசியம் ஏற்படும்போது அமைதியாகிவிடும்போதும், துறுதுறு ஜெனிலியாவை தேடவைக்கிறார்.


இந்த சட்டையை போடு, இதை செய் என தனது விருப்பங்களை பிள்ளைகளிடம் திணிக்கும் பிரகாஷ்ராஜ், தனது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் தருணங்களில் நடிப்பு திமிங்கலம் என்பதை மீண்டும் நிருபிக்கிறார்.
"உன் மனசுல இருந்ததையெல்லாம் முன்னாடியே சொல்லியிருக்கலாமேடா" என மகனின் கையைபிடித்துக்கொண்டு பிரகாஷ்ராஜ் அழும் காட்சி. "இப்பகூட உங்க கைக்குள்ளதானே என் கையிருக்கு" என ஜெயம்ரவி விம்மும்போது கைகுட்டை அவசியமாகிறது.
பெண்வீட்டாரு்ககு பதில் சொல்லும் அப்பாவின் பொறுப்பில் ரவியும், காதலியை சமாதானம் செய்யும் மகனின் இடத்தில் பிரகாஷ்ராஜூம் இடம் மாறிக் கொள்ளும் இடம் கவிதை.
நாயகனின் நண்பர்களாக வரும் சந்தானம் - பிரேம்ஜி, ஜெனிலியாவின் தந்தையாக வரும் சாயாஜி ஷிண்டே, கல்லூரி பேராசிரியராக எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டவர்கள் அவ்வப்போது கலகலப்பை குவிக்கின்றனர்.
மேக்கப் பைத்தியமாக வரும் ரவியின் தங்கை, எப்போதும் போனும் காதுமாக திரியும் அக்கா கௌசல்யா, வேலைகாரனாக வரும் சத்யன் போன்ற சின்னசின்ன கேரக்டர்களும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளனர்.
கண்ணில் ஒற்றிக்கொள்ள நினைக்கும் கண்ணனின் ஒளிப்பதிவு, துள்ளிஆட வைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் படத்தில் அம்சம்.
மொழி மாற்றம் என்றாலும் ராஜாவின் இயக்கத்தில் எழில் மாற்றமில்லை.
'சந்தோஷ் சுப்ரமணியம்' சக்ஸஸ்.

No comments: